வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தான் காளியம்மன் ஆலய குடமுழுக்கு
வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தான் காளியம்மன் ஆலய குடமுழுக்கு விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே மேட்டு நேரத்தான் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவையொட்டி ஆவணி 25ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. நண்பகல் 12 மணிக்கு மூலவர்யந்திர பிரதிஷ்டை, கோபுர கலச பிரதிஷ்டை நடைபெற்றது. மாலை ஐந்து மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் முதலாம் காலையாக பூஜை நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இன்று காலை விக்னேஸ்வர பூஜை உடன் இரண்டாம் காலை யாக பூஜை நடைபெற்று பூர்ணா ஹூதியுடன் நிறைவுற்றது.
செந்தில்சிவம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனித நீர் நிரம்பிய தீர்த்தக் குடங்களை சுமந்து காலை சுமார் 10 மணி அளவில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோவில் முன்பாக அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், நிர்வாகிகள், மேட்டுநீரேத்தான் கிழக்கு தெருகிராம பொதுமக்கள் செய்து இருந்தனர் .