காளியம்மன் ஆலய விழா: நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு
மதுரை அருகே சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது;
சோழவந்தான் அருகே தச்சம்பத்து காளியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி செலுத்தி வழிபட்டனர்.
மதுரை அருகே சோழவந்தான் அருகே, தச்சம்பத்து கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்விழா முன்னிட்டு, கலந்த 20 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்று, பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் வைத்தனர். இரண்டாம் நாள் காலை, திருவேடகம் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் அக்னி சட்டி எடுத்து வந்தனர் .
இதில், சுமார் ஆறடி எட்டடி அலகு குத்தி பால்குடம் அக்னிசட்டி எடுத்து வந்தனர். அன்று மாலை வைகை ஆற்றில் இருந்து சக்தி கிரகம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, காளியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். சுந்தரராஜ பெருமாளுக்கு மாவிளக்கு வைத்து பூஜையில் செய்தனர். இரண்டாம் நாள் காலையில் அன்னதானம் நடைபெற்றது.
மாலை காளியம்மனுக்கு மாவிளக்கு வைத்தனர். இதைத்தொடர்ந்து, நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்று, சிறப்பு பூஜைகள் நடந்தன மூன்றாம் நாள் காலை வைகை ஆற்றில் முளைப்பாரி கரைத்தனர். மஞ்சள் நீராட்டுவிழா நடந்தது. சோழவந்தான் காவல் உதவி ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திந்தனர்.