சோழவந்தான் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுவினர் அஞ்சலி
சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்;
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேருந்து நிலையத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் வைகை ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பாக அனுசரிக்கப்பட்டது. இதில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் கொரியர் கணேசன், கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில், சோழவந்தான் பேரூர் செயலாள ர்முருகேசன் ,மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் , ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் , பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா , சரண்யா கண்ணன் நிர்வாகிகள் பேரூர் இளைஞர் அணி கேபிள் மணி பேரூர் துணைச் செயலாளர் தியாகு ஆட்டோ சங்க நிர்வாகிகள் முகேஷ் கிருஷ்ணமூர்த்தி அழகேந்திரன் ஆட்டோ செந்தில் பாலா எஸ்.பி .மணி , மகாலிங்கம், சக்திவேல், ஜெயக்குமார், பிச்சைமணி, எஸ்எம்டி நாகராஜ், விக்கிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், சோழவந்தான் பெரிய கடை வீதி பகுதியில் முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் .கே. முருகேசன் தலைமையில், ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.இதில், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வட்ட பிள்ளையார் கோவில் அருகில் பேரூராட்சி ஏழாவது வார்டு கவுன்சிலர் டீக்கடை கணேசன் ஏற்பாட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில், ஏழாவது வார்டுக்கு உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் நகர இளைஞரணி செயலாளர் கேபிள் மணி ஏற்பாட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செய்தார். இதில், 3வது வார்டுக்கு உட்பட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
கருப்பட்டியில், ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மருத்துவரணி கருப்பையா, கவுன்சிலர் தங்கப்பாண்டி ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர். இதில், கருப்பட்டி கிளைக் கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
மன்னாடி மங்கலத்தில், தெற்கு கிளைக் கழகம் சார்பில் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இதில், கிளைச் செயலாளர் ராஜபாண்டி உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். நாச்சிகுளம் மற்றும் கரட்டுப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் ஏற்பாட்டில், ஜெயலலிதாவின் திருஉருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
மேலக்காலில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு கிளை செயலாளர்கள் காசிலிங்கம், ராஜபாண்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேனூரில் சோனை முத்து, பாஸ்கரன் உள்ளிட்ட அதிமுகவினர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். சோழவந்தான் வேப்ப மர ஸ்டாப் அருகில் முன்னாள் வார்டு செயலாளர் பால் பண்ணை ராஜேந்திரன் ஏற்பாட்டில், ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
இதில் ,அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட அனைத்து கிளைக் கழகங்கள் மற்றும் சோழவந்தான் பேரூர் கழகத்திற்குஉட்பட்ட அனைத்து வார்டுகளிலும் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவிமரியாதை செய்யப்பட்டது.