மதுரை அருகே அலங்காநல்லூரில், ஜெயலலிதா நினைவு நாள்
மதுரை அலங்காநல்லூரில், ஜெயலலிதாவின் 5வது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்;
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில், அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான, ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் சேர்மன் ஆர்எஸ் ராம்குமார் தலைமையில் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பாலாஜி தெய்வம், மன்னார்குடி மகாராசன், கோடங்கிபட்டி அழகுமலை, முடுவார்பட்டி ஜெயசந்திர மணியம் ஆகியோர் முன்னிலையில், அவரது, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கல்லணை சேது சீனிவாசன், வாவிடமருதூர் திருநாவுக்கரசர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கல்வேலி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைவர் கோட்டைமேடு சரவணன், விவசாய அணி குமார் சின்ன பாண்டி, தண்டலை ஆனந்த், ஏர்ரம்பட்டி மதன், புதுப்பட்டி பாண்டுரங்கன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.