ஜல்லிக்கட்டு கலையரங்கம்: அரசுக்கு வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து சோழவந்தான் தொகுதியில் சுவரொட்டிகள்;
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க உத்தரவு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து சோழவந்தான் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க உத்தரவு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து சோழவந்தான் தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
உலகப் புகழ்பெற்ற, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கான மைதானம் அமைக்க உத்தரவு வழங்கிய தமிழக முதல்வர், பரிந்துரை செய்த பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சோழவந்தான் தொகுதி முழுவதும் சோழவந்தான் பேரூராட்சி பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து, மேலும் அவர் கூறுகையில்: முதல்வர் மற்றும் அமைச்சர் மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து சோழவந்தான் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.