அலங்காநல்லூர் அருகே பள்ளி சிறுவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு: குவியும் பாராட்டுகள்

அலங்காநல்லூர் அருகே பள்ளி சிறுவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுப்போட்டி வைரலாகியதால் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.;

Update: 2023-01-03 09:43 GMT

களிமண்ணை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டுப்போட்டி. 

மதுரை, அலங்காநல்லூர் அருகே உள்ளது குறவன் குளம் கிராமம். இந்த கிராமத்தில், உள்ள பள்ளி சிறுவர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் போன்று, களிமண்ணால் செய்யப்பட்ட காளைகளை கொண்டும் வாடிவாசலில் இருந்து வெளிவரும் ஜல்லிக்கட்டு காளை என மிக எளிமையான முறையில் தத்ரூபமாக செய்து காட்டினர் .

பள்ளி அரையாண்டு விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் இந்த கிராமத்து சிறுவர்கள் ஜல்லிக்கட்டு திருவிழாவை களிமண்ணை கொண்டு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அதாவது, ஜல்லிக்கட்டு மைதானம் வாடிவாசல் வாடிவாசலில் இருந்து காளைகள் வெளிவருவது பரிசு பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட காட்சிகளை தத்ருபமாக செய்து காட்டியது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இதனைத்தொடர்ந்து சிறுவர்களின் ஜல்லிக்கட்டு நிகழ்வு பலரையும் கவர்ந்து, சிறுவர்களை பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News