சர்வதேச அளவிலான ஒட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு..!

ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற சோழவந்தான் மாணவனுக்கு அரிமா சங்கத் தலைவர் மருது பாண்டியன் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2023-07-27 08:30 GMT

ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற சோழவந்தான் மாணவன் விக்னேசை, அரிமா சங்கத் தலைவர் மருது பாண்டியன் பாராட்டினார்.

சோழவந்தான்:

நேபாளத்தில், நடைபெற்ற சர்வதேச தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவனுக்கு அரிமா சங்கத்தலைவர் நேரில் சென்று பாராட்டு தெரிவித்து உதவி செய்துள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் . இவர், நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச தொடர் ஓட்ட பந்தயங்களில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்று இந்திய நாட்டிற்கும் தமிழகத்திற்கும்   பெருமை சேர்த்துள்ளார். வெற்றிப் பதக்கங்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய விக்னேஷுக்கு கச்சிராயிருப்பு கிராம பொதுமக்கள் சார்பாக சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், சோழவந்தான் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளரும், சோழவந்தான் அரிமா சங்கத்தலைவருமான  தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன் , விக்னேஷின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பாராட்டு தெரிவித்து, அவரின் உயர் கல்விக்கும் வேலை வாய்ப்பிற்கும் உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

ஏற்கனவே, சோழவந்தான் அரிமா சங்கம் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் உள்ள மருது பாண்டியன் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருவது இப்பகுதி மக்களின்  வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News