மதுரை அருகே வாடிப்பட்டியில் அதிமுகஅனல் பறக்கும் பிரச்சாரம்

வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் 18 வார்டுகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்

Update: 2022-02-15 01:00 GMT

தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

வருகின்ற 19ஆம் தேதி வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலுக்கு தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அதிமுக சார்பாக தேர்தல் பிரச்சாரம் 18 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட்டது

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் 18 வார்டுகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் . அவர் பேசும்போது கடந்த நாங்கள் ஆட்சியில் இருந்த பொழுது தைத் திருநாளை மக்கள் வரிசையாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் பொங்கல் பரிசுப் பொருள்களுடன் ஆயிரம் ரூபாயும் வழங்கினோம். அதனைத் தொடர்ந்து மக்கள் மீது அக்கறை கொண்டு பொங்கல் பொருட்களுடன் 2500 ரூபாய் வழங்கப்பட்டது.

இப்போது இந்த ஆட்சியில் பொங்கல் பொருள்களையே ஒழுங்காக வழங்கவில்லை . திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசுடன் 5000 ரூபாய் வழங்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்திலேயே கோரிக்கை வைத்தார். ஆனால் இப்போது அவரது ஆட்சியில் பொங்கல் பரிசு பொருட்களை ஒழுங்காக வழங்கவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக வாக்குறுதி கொடுத்தார். ஒன்பது மாதங்கள் ஆகியும் இதுவரை எதுவும் வழங்கவில்லை. சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்று சொன்னவர்கள் எதையுமே செய்யவில்லை. உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய வாடிப்பட்டி பேரூராட்சி 18 வார்டுகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார் .

மேலும் 1வது வார்டு சாணம் பட்டியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சோனை தான் சேர்மன் வேட்பாளர் என ஆர்.பி.உதயகுமார் அறிவித்தார்.

Tags:    

Similar News