பள்ளியில் மாணவர்களுக்கான தனித்திறன் கருத்தரங்கம்

படிக்கும் காலத்தில், தனித்திறனை முழு ஈடுபாடுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும்;

Update: 2023-09-12 00:30 GMT

அலங்காநருகே மாணவர்களுக்கான தனித்திறன் கருத்தரங்கம்.

அலங்காநல்லூர் அருகே, மணியஞ்சி அரசு பள்ளியில் மாணவர்களுக்கான தனித்திறன் கருத்தரங்கம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, மணியஞ்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் மதுரை பிரசிடன்ஸி சார்பில், மாணவிகளுக்கான சிறப்பு தனித்திறன் கருத்தரங்கு பயிற்சி நடைபெற்றது.

இதில், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.சங்கத் தலைவர் மதுரை பாண்டி, செயலாளர் பன்னீர் செல்வம், நிர்வாக செயலாளர் பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில், முன்னாள் செயலாளர் பொன்குமார், விஜயலட்சுமி ஆகியோர்  உரையாற்றுகையில்,

சவால்கள் நிறைந்த இன்றைய உலகில், ஆளுமையை வளர்க்க, கல்வி அவசியம். ஒற்றுமை, குழுத் திறன்களை வளர்க்கவும் கல்வி அவசியமாகிறது.ஒரு நாட்டின் வளர்ச்சி, கிராமப்புறங் களையே சார்ந்துள்ளது என்று மகாத்மாகாந்தி கூறியதுபோல, கிராமப்புற மாணவர்களின் பங்களிப்பு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, ஒரு மைல் கல்லாக அமையும்.

இன்றைய உலகம், அதிநவீன விஞ்ஞானத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. இதை, எதிர்கொள்ள, மாணவர்களின் தனித்திறன் அத்தியாவசியமாகிறது. படிக்கும் காலத்தில், தனித்திறனை முழு ஈடுபாடுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தங்களின் குடும்பத்தின் சூழ்நிலையை அறிந்து, முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன், நன்றாக படித்து. பெற்றோர்களின் கனவை நனவாக்க வேண்டும். இன்றைய லட்சியம், நாளைய மாற்றம், இன்றைய அலட்சியம். நாளைய ஏமாற்றம் என்பதை நினைவில் கொண்டு மாணவர்கள் குறிக்கோளுடன் படிக்க வேண்டும்.

மாணவர்கள் தங்கள் அறிவிலே ஆக்கமும், சிந்தனையில் தெளிவும், வார்த்தையிலே வல்லமையும், உடலில் வலிமையையும், செயலிலே செம்மையும், உணர்ச்சியில் கட்டுப்பாடும், : தேசத்தின் மீது அக்கறையும் கொண்டு படித்தால் அவர்களின் இலக்கு, லட் சியம் நிறைவேறும்..

விடாமுயற்சியும், தன்னம்பிக்கைதான் மனித வாழ்க்கையில் வெற்றிக்கு படிகளாக அமைகிறது. தோல்வி என்பது மனிதன் வெற்றிக்கு முதல் படிக்கட்டு. விடாமுயற்சி செய்த அனை வரும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

எத்தத்துறையை தேர்ந்தெடுத்து படித்தாலும், அந்தத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கே வெற்றி வாய்ப்புகள் வந்து குவிகின்றது. மாணவர்கள் படிக்கும்போதே மற்ற வர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். சேவை மனப்பான்மையுடன், சமூகத்தின் மீது அக்கறை வேண்டும். மாணவர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், எதிர்காலத்தில் சிறந்த மனிதனாக ஒளிர்வது நிச்சயம் என தங்களது உரையில் குறிப்பிட்டனர்.

கருத்தரங்கில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கலந்து கொண்டனர்

Tags:    

Similar News