சோழவந்தான் பகுதி பள்ளிகளில் சுதந்திர தின விழா..!

சோழவந்தான் பகுதி பள்ளிகளில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Update: 2024-08-16 11:10 GMT

சுதந்திர தின விழாவுக்கு பல்வேறு தேச தலைவர்களின் வேடத்தில் வந்த மாணவர்கள்.

பள்ளிகளில், சுதந்திர தின விழா.

சோழவந்தான்.

மதுரை அருகே,சோழவந்தான் பகுதி பள்ளிகளில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பள்ளிகளில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

முள்ளிபள்ளம் பவர் நர்சரி பிரைமரி பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பள்ளி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் சுதந்திரத்திற்காக,பாடுபட்ட தேச தலைவர்களை மாறு வேடங்களாக போட்டுக்கொண்டு, குழந்தைகள் சுதந்திரப் போராட்ட பாடல்களை பாடியும் நாடகங்களில் நடித்தும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பரவசமூட்டினர்.

 நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியை அம்பிகா வரவேற்புரை ஆற்றினார். சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சிகளை, ஆசிரியைகள் ஜனகை மாரி, துர்கா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். கலை நிகழ்ச்சிகள், மற்றும் மாறுவேட போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு பள்ளி முதல்வர் ரஜினிகாந்த் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

விழா நிறைவில், ஆசிரியை செல்வி நன்றி கூறினார். இதேபோல், சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைமை ஆசிரியர் ராபின்சன் தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து, நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேச தலைவர்களை நினைவு கூர்ந்து பேசியது மெய்சிலிர்க்க வைத்தது சுதந்திரப் போராட்ட பாடல்களை பாடி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் , ஆசிரியர்கள் பெற்றோர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News