சோழவந்தான் அருகே தென்கரையில் வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா

தென்கரையில், நடைபெற்ற விழாவில், ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா ஐயப்பன், வேளாண்மை அலுவலர் பானுமதி ஆகியோர் தொடக்கி வைத்தனர்

Update: 2022-05-25 08:45 GMT

தென்கரையில் நடைபெற்ற விழாவில், ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா ஐயப்பன், வேளாண் அலுவலர் பானுமதி உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர் 

தென்கரை மற்றும் மேலக்கால் ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட துவக்க விழா காணொளி காட்சி மூலம் தமிழக.முதல்வர்  தொடக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தென்கரை மற்றும் மேலக்கால் ஊராட்சியில் வேளாண் துறை மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் கைத் தெளிப்பான் விசை தெளிப்பான் மற்றும் உளுந்து விவசாயிக்கு இலவச தென்னை கன்று உள்ளிட்ட உபகரணம் மற்றும் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதல்வர், காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் .

இதில், மாவட்ட துணை இயக்குனர் சிவாஅமுதம், துணை வேளாண் அலுவலர் மனோகரன், மண்டல வளர்ச்சி அலுவலர் பேச்சியம்மாள், தென்கரை ஊராட்சி மன்றத்தலைவர் மஞ்சுளாஐயப்பன், மேலக்கால் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன், துணைத்தலைவர் சித்தாண்டி ஒன்றியக் கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தென்கரையில், நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா ஐயப்பன், வேளாண்மை அலுவலர் பானுமதி, உதவி வேளாண்மை அலுவலர் தங்கத்துரை, சரவணகுமார் ,உதவி தோட்டக்கலை துறை அலுவலர் அப்துல் ஹாரிஸ் ,அட்மா திட்ட அலுவலர் கண்ணன் மற்றும் கிராம பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News