வாடிப்பட்டி வட்டாரத்தில், விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாரத்தில், விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2023-11-12 09:34 GMT

மதுரை வேளாண் உதவி இயக்குனர் பாண்டி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டாரத்தில், விவசாயிகளுக்கு சான்று பெற்ற விதை நெல்கள் கோ 51, என்.எல்.ஆர்.34449 மற்றும் ஏ.எஸ்.டி. 16 ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் மொபைல் சிங் பேக்டீரியா மானிய விலையில் வழங்கப்படுகிறது .

உயிர் உரங்கள் மூலம் உர பயன்பாட்டினை, குறைப்பதற்கும், தரமான பயிர்களை பெறவும் உதவியாக இருக்கும்.

மேலும், பயிர்கள் வளர்ச்சி மற்றும் மகசூல் தேவைப்படும் முதன்மைச் சத்துக்களைத் தவிர, நுண்ணூட்ட சத்துக்கான இரும்பு, மாங்கனிசு, துத்தநாகம், தாமிரம், போரான் மற்றும் மாலிட்டினம் தினம் அடங்கிய நுண் சத்துக்கள் பயிர்களுக்கு குறைந்த அளவில் மற்றும் அத்தியாவசிய தேவைக்கான நெல், தென்னை நுண் சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்தான சூடோமொனஸ் விரிடி மற்றும் ட்ரைகோ டெர்மா விரிடி வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அனைத்தையுமே  விவசாயிகளுக்கு பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News