ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளில் நிவாரண தொகை வழங்க வியாபாரிகள் கோரிக்கை
சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளில் நிவாரண தொகை வழங்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வர்த்தகர்கள் கோரிக்கை: விடுத்துள்ளனர்.
சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில், நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் பொது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக புகார் தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பு எடுக்கும் பொழுது சாக்கடையின் மேல் இருந்த கற்கள் சேதமடைந்ததை பேரூராட்சி நிர்வாகத்திடம் சரி செய்ய கேட்டபோது, நிதிஇல்லை என்று கூறி தட்டிக்கழித்துள்ளனர்.
ஏற்கனவே, சோழவந்தானில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய பகுதிகளில் நிவாரண பணிகள் மிக மிக மந்தமாக நடக்கக்கூடிய நிலையில் வருவாயை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க கூடிய வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றிய போது சேதமடைந்த தங்களது வணிக நிறுவனத்தின் முன் பகுதிகளை சரி செய்வதற்கு ரூபாய் 5000 முதல் 20 ஆயிரம் வரை செலவழிக்க கூடிய நிலையில் உள்ளனர். ஏற்கனவே, வியாபாரத்திற்கு வாங்கிய கடனை கட்ட முடியாத சூழ்நிலையில் மீண்டும் கடன் வாங்கி செலவழிக்க கூடிய நிலையில் உள்ளனர். ஆக்கிரமிப்பு எடுப்பதாக கூறி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாழ்வில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிவது போல் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
ஆகையால், பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.