மதுரை அருகே காலிபிளவர் விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் கவலை
மதுரை பாலமேடு அருகே நோய்தாக்குதலால் காலிபிளவர் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்;
மதுரை பாலமேடு பகுதிகளில் நோய் தாக்குதலால் காலிபிளவர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்
மதுரை பாலமேடு பகுதியில் சாகுபடி செய்துள்ள காலிபிளவர் பயிர் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், பாலமேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் காலிபிளவர் விவசாயம் செய்து வருகின்றனர். ஒட்டன்சத்திரத்தில், இருந்து விதைகளை வாங்கி வந்து இங்கு விவசாயம் செய்து வருகின்றனர்.ஒரு ஏக்கரில் விவசாயம் செய்வதற்கு சுமார் 45.ஆயிரம் வரை செலவு செய்வதாக கூறும் இந்தப் பகுதி விவசாயிகள், சமீபகாலமாக காளிபிளவர் விளைச்சல் அறுவடை செய்யும் நேரத்தில் அதிக வெப்பம் மற்றும் மர்ம நோய் தாக்குதலால் ப்ளூ காலிபிளவர் பூக்கள்சிவப்பு நிறமாக மாறியும் பூவின் மேல் பகுதியில் நுறை தள்ளியும் இருப்பதால் ஏக்கருக்கு சுமார் 45 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர் .
மேலும், அடிக்கடி தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் வந்து பார்த்த பின்பும் நோய் தாக்குதலை கண்டுபிடிக்க முடிய வில்லை என்றும் எங்களுக்கு வேறு தொழில் இல்லாததால் விவசாயத்தை நம்பி இருப்பதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர். ஆகையால் , அரசிடம் உரிய நிவாரணத்தை பெற்றுத்தர வேளாண்துறை அதிகாரிகள்.நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.