சோழவந்தானில் திமுக அரசை கண்டித்து, அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்
சோழவந்தானில் திமுக அரசை கண்டித்து, அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.;
சோழவந்தானில் சொத்து வரி உயர்வு கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு ,மின்சார கட்டண உயர்வு ,அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ,ஆவின் பால் விலை உயர்வு கண்டித்தும், போதை பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் சோழவந்தானில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா, மாணிக்கம், எஸ் எஸ் சரவணன் ,ஒன்றிய செயலாளர்கள் வாடிப்பட்டி மு காளிதாஸ், எம் வி பி ராஜா, அரியூர் ராதாகிருஷ்ணன், யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .பேரூர் செயலாளர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திருப்பதி தமிழ்செல்வன் துரை தன்ராஜ் சிவசக்தி பஞ்சவர்ணம் புளியங்குளம் ராமகிருஷ்ணன் மகளிர் அணி லட்சுமி பேரூர் கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் சண்முக பாண்டியராஜா மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா பேரூர் துணை செயலாளர் தியாகு பாசறை மாவட்ட இணை செயலாளர் வாடிப்பட்டி மு கா மணிமாறன் விவசாய அணி இணைச் செயலாளர்வாவிட மருதூர் குமார் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் முடுவார் பட்டி முத்துக்கிருஷ்ணன் கோட்டைமேடு பாலா மன்னாடிமங்கலம் தெற்கு ராஜபாண்டி வடக்கு ராமு மேல க்கால் காசிலிங்கம் தவமணி தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டி நாச்சிகுளம் தங்கபாண்டி முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் குருவித்துறை தண்டாயுதம் விஜய் பாபு வனிதாபேட்டை மாரி முத்துக்குமார் சுரேஷ் ராஜா பாலா ஜெயபிரகாஷ் சோழவந்தான் எஸ்பி மணி மற்றும் 10 வது வார்டு மணிகண்டன் ஒன்பது வார்டு பிரேம் தென்கரை நாகமணிமற்றும் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் இளைஞரணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணிநன்றி கூறினார்.