வாடிப்பட்டி அருகே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமோக வரவேற்பு
Huge Welcome To Former CM EPS வாடிப்பட்டி அருகே, எதிர்க்கட்சித் தலைவர்எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.;
Huge Welcome To Former CM EPS
மதுரையில் நடைபெறும் நாடார் மகாஜன சங்க 72 ஆம் ஆண்டு விழாவில், கலந்து கொள்ள மதுரைக்குவருகை தந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர். பி. உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு கொடுத்தனர். அப்போது, கட்சியினர் ஆளுயரரோஜா பூ மாலை வெற்றிலை மாலையையும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
Huge Welcome To Former CM EPS
மதுரை வாடிப்பட்டி அருகே முன்னாள் முதல்வர் இபிஎஸ்சுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக நிர்வாகிகள்
இதில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உசிலம்பட்டி மகேந்திரன், சோழவந்தான் எம். வி. கருப்பையா, மாணிக்கம் ,மதுரை தெற்கு எஸ். எஸ்.சரவணன், திருப்பரங்குன்றம் டாக்டர் சரவணன், மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் வாடிப்பட்டி தெற்கு கொரியர் கணேசன், வாடிப்பட்டி வடக்கு மு. காளிதாஸ், அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், மதுரை மேற்கு அரியூர் ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி எம் .வி. பி ராஜா, வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ,பேரூர் செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன், வாடிப்பட்டி அசோக், அலங்காநல்லூர் அழகுராஜா ,பாலமேடு குமார்,மகளிர் அணி லட்சுமி, வனிதா, மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா ,ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, தென்கரை ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் சோழவந்தான் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சரண்யா கண்ணன், வசந்தி கணேசன், சண்முக பாண்டியராஜா,ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும்,
ஒன்றிய அவைத்தலைவர்கள் வாடிப்பட்டி வடக்கு ஆர் எஸ் ராமசாமி, தெற்கு கச்சிராயிருப்பு முனியாண்டி,பொதுக்குழு நாகராஜ், விவசாய பிரிவு வாவிடமருதூர் குமார், மாவட்ட பிரதிநிதி அலங்கை முரளி, வாடிப்பட்டி மணிமாறன், கோட்டைமேடு பாலா, தென்கரை நாகமணி,சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகிகள் சோழவந்தான் சிவா, கேபிள் மணி ,தியாகு, அசோக், ஜெயபிரகாஷ்,மன்னாடிமங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, குருவித்துறை விஜயபாபு, வழக்கறிஞர் காசிநாதன், மேலக்கால் காசிலிங்கம், ராஜபாண்டி, நாச்சிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் சுகுமாரன் மற்றும் உசிலம்பட்டி திருமங்கலம் கல்லுப்பட்டி பேரையூர் சேடப்பட்டி கள்ளிக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சோழவந்தான் உசிலம்பட்டி திருமங்கலம் தொகுதியை சேர்ந்த அதிமுக அனைத்து பிரிவு நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.