பாலமேடு முத்தையா சுவாமி கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து குதிரை தூக்கி அழகர் மலை அடிவாரம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2023-06-02 16:00 GMT

பாலமேடு அருகே ஸ்ரீ வளநாட்டு முத்தையா சுவாமி புரவி எடுப்பு உற்சவ விழா - பக்தர்கள் கிடாய் வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர்:

பாலமேடு அருகே ஸ்ரீ வளநாட்டு முத்தையா சுவாமி புரவி எடுப்பு உற்சவ விழா - பக்தர்கள் கிடாய் வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர்:

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே 66.எம்.உசிலம்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள ஸ்ரீ வளநாட்டு முத்தையா சுவாமி, சின்னம்மாள் சுவாமி, சின்னகருப்புசாமி, ஆண்டிச்சாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் புரவி எடுப்பு உற்சவ விழா நடைபெற்றது.மூன்று நாட்கள் நடந்த இந்த புரவி எடுப்பு உற்சவ விழாவில், பக்தர்கள் புனித நீர் எடுத்தல், நெல் குத்துதல், குதிரையை தூக்கி கண் திறக்கும் இடம் வந்து சேருதல், தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர்,வான வேடிக்கை முழங்க கிடாய் வெட்டுதல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து குதிரை தூக்கி அழகர் மலை அடிவாரம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா நடந்த மூன்று நாட்களும் அன்னதானம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏற்பாடுகளை, கோவில் பூசாரி ஆண்டிச்சாமி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News