அலங்காநல்லூரில் தமிழக அரசைக் கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
அலங்காநல்லூரில் தமிழக அரசைக் கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் இந்து முன்னணி சார்பாக தமிழக அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுரேந்திரன், தலைமை தாங்கினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் சக்திவேல், முத்துப்பாண்டி, ஒன்றிய துணைத் தலைவர் சேகர், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து கோவில்களை மட்டும் சீரழிக்கும் தமிழக அரசே கோவில்களை விட்டு வெளியேறு என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் அலங்காநல்லூர் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.