மதுரை அருகே சோழவந்தான் பகுதியில் பலத்த மழை: வீடுகளைச்சூழ்ந்த மழை நீர்

மழைநீர் வழிந்ததோட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்;

Update: 2022-07-31 13:15 GMT

சோழவந்தான் பேட்டை பகுதியில் மழை நீரானது, வீடுகளை சுற்றி வளைத்துள்ளது.

சோழவந்தான் பகுதிகளில் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை பகுதியில் பலத்த மழையால், வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது.மழைநீர் வழிந்ததோட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சோழவந்தான் நகரில் பலத்த மழையால், மாரியம்மன் கோயில், அய்யனார் பொட்டல்,பசும்பொன் நகர், ஆலங்கொட்டாரம் பகுதிகளில், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Tags:    

Similar News