மதுரை கோயில்களில் ஜன. 2- ஆம் தேதி ஹனுமன் ஜெயந்தி விழா
மதுரை பகுதி கோயில்களில் ஜன. 2-ல் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா கொண்டாடப்படுகிறது;
ஜன.2-ல் கோயில்களில் அனுமன் ஜயந்தி சிறப்பு வழிபாடு
மதுரை பகுதி கோயில்களில் ஜன. 2-ல் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சுவாமி ஆலயம், பி.ஆர்.சி. டெப்போ ஆஞ்சநேயர், சோழவந்தான் அக்ரஹாரம் ஆஞ்சநேயர், மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்யா விநாயகர் ஆலயம், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், கோமதிபுரம் ஆவின் செல்வ விநாயகர் ஆலயங்களில், ஜன. 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹனுமத் ஜயந்தியையொட்டி, ஹனுமனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் மாலை 5.30..மணிக்கு நடைபெறும். அதையடுத்து வடைமாலைகள் அணிவித்தும், வெண்ணை சாத்தியும், அர்ச்சனைகள் நடைபெறவுள்ளது.