கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா: திரளான பக்தர்கள் வழிபாடு
சோழவந்தான் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட அனுமன் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் அனுமனை தரிசித்தனர்;
சோழவந்தான் அரசு பேருந்து பணிமனை எதிரேயுள்ள ஜெயவீரஆஞ்சநேயர் கோவியில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு பால்,தயிர் உள்பட 12 அபிஷேகங்கள் நடந்தது.அலங்காரம் வடைமாலை சார்த்தப்பட்டது.சிதம்பரம் பூசாரி சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். இதையொட்டி, ராமகிருஷ்ணன், நல்லையன்என்றபோஸ், செல்வம் ஆகியோர் அன்னதானம் வழங்கினார்கள்.
இதேபோல், கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள ஸ்ரீ மங்களஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக வரதராஜ்பண்டிட் தலைமையில் யாகவேள்வி மற்றும் ஆஞ்சநேயர் காயத்திரி ஹோமம் நடந்தது.ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று இரவு ஜெனகை நாராயணபெருமாள் கோவில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் ,வடைமாலை சார்த்தப்பட்டது.
ரகுராமம்பட்டர் சிறப்பு பூஜை ஆராதனை நடத்தினர்.செயல் அலுவலர் சத்யநாராயணன், கோவில்பணியாளர்கள், உபயதாரர் மகேந்திரன் முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.கே.முருகேசன் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கினார்கள். இதேபோல், திரௌபதி கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகள் நடந்தது. இதில் தேவிகாபெருமாள், நல்லமுத்து, திருப்பதி,மகேஷ்வரிஜவகர்லால், தமிழ்ச்செல்விகுப்புசாமி உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.