மதுரை அருகே ஐம்பதிற்கும் குறைவானவர்கள் பங்கேற்ற கிராம சபை கூட்டம்
மதுரை அருகே ஐம்பதிற்கும் குறைவானவர்கள் பங்கேற்ற கிராம சபை கூட்டம் நடைபெற்றது.;
அய்யங்கோட்டை கிராம சபை கூட்டத்தில், குறைவான எண்ணிக்கையில் பொதுமக்கள் கலந்து கொண்டதால் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்தனர்.
உண்மையான கிராம ராஜியமே ராமராஜியம் என தேச பிதா மகாத்மா காந்தி கூறி இருந்தார்.அவரது கனவை நனவாக்கும் வகையில்தமிழக அரசு கி்ராமங்கள் மேம்பாடு அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த உத்தரவின்படி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம், அய்யங்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐம்பதிற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் ,இங்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களில் சிலர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கூட வராத காரணத்தால் ,கிராம சபை கூட்டங்கள் நடத்துவதன் நோக்கம் நிறைவேறுமா என பொதுமக்கள் சந்தேகப்படும் சூழ்நிலை உருவாகியது.
மேலும், இந்த ஊராட்சியில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கக்கூடிய நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த கிராம சபை கூட்டத்திற்கு 50க்கும் குறைவான நபர்கள் கலந்து கொண்டதால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனையடைந்தனர். மேலும், கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்த யூனியன் அதிகாரிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.
இது போன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்களை ,மாவட்ட ஆட்சித் தலைவர் கண்காணித்து உரிய முறையில் கிராம சபை கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.