டீசல் வடிந்த படி சென்ற அரசு டவுண் பஸ்: அச்சத்தில் பயணித்த பயணிகள்

டீசல் வடிந்த படி சென்ற அரசு டவுண் பஸ்சில் பயணித்த பயணிகள் அச்சத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-10-20 09:30 GMT
சோழவந்தானில் டீசல் வடிந்த படி ஓடிய அரசு பேருந்து.

சோழவந்தானில் அரசு பேருந்தின் கீழ் பகுதியில் டீசல் வடிந்தபடி  பேருந்தை இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயத்தால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி செல்லும் சோழ வந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் டிஎன் 57 .N1622  என்ற எண் கொண்ட பேருந்தின் அடி பாகத்தில் டீசல் சிந்திய படி பயணிகளை ஏற்றி செல்வதால், பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

நேற்று மதியம் 12 மணி அளவில் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு வந்த இந்த பேருந்தின் கீழ்ப்பகுதியில் டீசல் சிந்திய படி இருந்தது இதனைத் தொடர்ந்து, பேருந்து ஓட்டுபவர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு டீசல் லீக் ஆவதாகவும் ஆகையால், பேருந்து இயக்க முடியாது என தெரிவிப்பதற்காக போன் செய்த போது, அதிகாரிகள் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் வேறு வழியின்றி தொடர்ந்து பேருந்தை இயக்க முன் வந்ததால், பேருந்தில் ஏற பொதுமக்கள் அச்சப்பட்டனர். இருப்பினும், பேருந்துக்காக காத்திருந்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் வேறு வழியின்றி சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டிக்கு பேருந்தில் ஏறிச் சென்றனர். பேருந்து செல்லும்போது, வழிநெடுக டீசல்,சிந்திய படி சென்றது. இதனால், ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் ஒருவித பதட்டத்துடன் பொதுமக்கள் பயணம் செய்ததாக கூறினர்.

அரசு போக்குவரத்து கழகம் இது போன்ற பேருந்துகளை இயக்கி பொது மக்களின் உயிருடன் விளையாடாமல், இருக்க வேண்டுமென, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News