வாடிப்பட்டி அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி அரசு அதிகாரி மரணம்

Update: 2023-06-13 02:30 GMT

வாடிப்பட்டி அருகே விபத்துக்குள்ளான கார்

வாடிப்பட்டி அருகே சாலையோர தடுப்பில் கார் மோதிய விபத்தில்  வருவாய் அதிகாரி  உயிரிழந்தார்.

கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (73). இவர், மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர். இவர், நேற்று தனது தங்கை சுகஜோதி (70) என்பவருடன் மதுரையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் கோயம்புத்தூருக்கு புறப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவு முன்பு வந்தபோது திடீரென்று எதிர்பாராத விதமாக கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் தடிப்பில் மோதி தலைக் குப்புற  கவிழ்ந்தது.

இந்த விபத்தில்  வருவாய்த்துறை அதிகாரி  மோகனசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில், படுகாயமடைந்த சுகஜோதி வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு ள்ளார். இதுகுறித்து, வாடிப்பட்டி  காவல் நிலைய ஆய்வாளர்  நித்திய பிரியா, உதவி ஆய்வாளர்  மாயாண்டி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News