மதுரை அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்து: போலீஸார் உதவியுடன் அகற்றம்

மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த மாநகர அரசு பேருந்து திடீரென பிரேக் டவுன் ஆனதால் பாதிக்கப்பட்டது

Update: 2021-12-11 16:30 GMT

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்து; போக்குவரத்து போலீஸார் உதவியுடன் பேருந்தை தள்ளி விட்டனர்

முக்கிய சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; போக்குவரத்து காவலர் உதவியுடன் பேருந்தை தள்ளி விட்டனர்

மதுரையில் மொத்தமாக 727 மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த மாநகர அரசு பேருந்து திடீரென பிரேக் டவுன் ஆனதால், சாலையில் நின்றதும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதை உணர்ந்த போக்குவரத்து காவலர், நடத்துனர் மற்றும் பாதசாரிகள் உதவியுடன் பேருந்த தள்ளிவிட்டு பேருந்தை இயக்க உதவி செய்ததை அங்கிருந்த பொதுமக்கள் வேதனையுடன் கடந்து சென்றனர். மேலும் ,மாநகரில் இயக்கப்படும் பேருந்துகள் தொடர்ச்சியாக இதுபோன்று அடிக்கடி பழுதாகி சாலையில் நிற்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக, போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News