கோயில்களில் கோகுலாஷ்டமி விழா: சிறப்பு திருமஞ்சனம்

மதுரை தாசில்தார் நகர், வரசித்தி விநாயகர், சித்தி விநாயகர் ஆலயங்களில், கோகுலாஷ்டமி வழிபாடு, அபிஷேகம் நடைபெற்றது;

Update: 2023-09-07 03:45 GMT

மதுரை வரசித்தி விநாயகர் ஆலயத்தில், பெருமாள், தாயாரக்கு நடந்த திருமஞ்சனம்.

சோழவந்தான் அருகேகிருஷ்ணர் ஜெயந்தி விழாவில் கிருஷ்ணர் சிலை குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருகே, நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட மேல்நாச்சிகுளம் கிராமத்தில் கிருஷ்ணன் கோவிலில் வருடம் தோறும் கிருஷ்ணன் ஜெயந்தி விழா நடந்து வருகிறது. இதே போல், இந்த ஆண்டு மூன்று நாட்கள் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடந்து பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், முக்கிய விழாவான உறியடி போட்டி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் டிரைவர் கண்ணன் ( 41 ).

இளவட்டக் கல்லை தூக்கி போட்டியில் வெற்றி பெற்றார். இங்கு ,கிருஷ்ணன் ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 4 அடியில் கிருஷ்ணர் சிலை நிறுவப்பட்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா நிறைவு பெற்றவுடன் இந்த சிலை குலுக்கல் முறையில் கிராமத்தில் உள்ள பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதே போல், இந்த ஆண்டு நேற்று இரவு கிருஷ்ணர் ஜெயந்திக்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலை பூஜைகள் நிறைவு பெற்று குலுக்கல் முறையில் மேல்நாச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, மேல் நாச்சிகுளம் கிராம மக்கள் செய்திருந்தனர்.சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

மதுரை தாசில்தார் நகர், வரசித்தி விநாயகர், சித்தி விநாயகர் ஆலயங்களில், கோகுலாஷ்டமி முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பெருமாள், தாயார் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.கோயில் நிர்வாகத்தின் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News