மதுரை அருகே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் ஆவின் பொது மேலாளர் ஆய்வு

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வைத்தனர்;

Update: 2023-09-14 14:30 GMT

மதுரை அருகே, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் ஆவின் பொது மேலாளர் ஆய்வு.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ஆவின் பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், முடுவார்பட்டி, மாணிக்கம் பட்டி, மரியம்மாள் குளம் உட்பட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில், மதுரை ஆவின் பொது மேலாளர் ஏ. சிவகாமி, திடீர் ஆய்வு நடத்தினார். சங்க உறுப்பினர்களிடம் குறைகளை கேட்டிருந்தார். பால் மாட்டு கடன், பால் மாடு பராமரிப்பு கடன், வங்கிகள் மூலம் பெற்று தர வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.

தற்போது, பால் குளிர மையங்களில் தரப் பரிசோதனை செய்து ஒப்புகை சீட்டு வழங்குவதால், பால் விலை அதிகமாக கிடைக்கிறது என்றும், உறுப்பினர்கள் கூறினர். ஆவன செய்வதாக பொது மேலாளர் உறுதியளித்தார். உடனடியாக, பகுதி அலுவலர்களை அழைத்து அதற்கான ஏற்பாடுகள் செய்து உறுப்பினர்களுக்கு உதவ வேண்டும், பால் கொள்முதல் விலை உயர்த்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உடன், உதவி பொது மேலாளர் டாக்டர் ஜெ. ரவிச்சந்திரன்,பால் உற்பத்தி சங்க மேலாளர் செல்வம் சங்க செயலாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News