கோயிலில் பொது விருந்து, சிறப்பு வழிபாடு எம்.எல்.ஏ. தொடங்கி வைப்பு!
கோயிலில் பொது விருந்து, சிறப்பு வழிபாடு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்;
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று பொது விருந்தை வெங்கடேசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்:
சோழவந்தான்:
பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற பொது விருந்தை, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ . தொடங்கி வைத்தார்.
சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், திமுக நகரச் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், முன்னாள் செயலாளர் முனியாண்டி, கோயில் செயல் அலுவலர் இளமதி , பணி நியமனக் குழு ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி ,முத்து செல்வி ,சதீஷ், கொத்தாலம் செந்தில், நிஷா கௌதமராஜா, செல்வராணி, சிவா நிர்வாகிகள் சங்கங்கோட்டை ரவி, சந்திரன், மில்லர் மற்றும் பணியாளர்கள் பூபதி, வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கோயில்களில் இன்று பொது விருந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது .இதில், சட்டமன்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர் ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று கோயில்கள் பொது விருந்து நடைபெறுவது வழக்கம்.