மதுரை அருகே பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா

மதுரை அருகே பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.;

Update: 2024-09-10 08:04 GMT

அலங்காநல்லூர், அய்யூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலில் பெரிய விநாயகர் சிலை கிராமத்தின் சார்பாக வைக்கபட்டு அதற்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து சுண்டல், பொரிகடலை, ஆப்பிள், பேரிக்காய், கொய்யாப்பழம், வாழைப்பழம், வெற்றிலை பாக்குடன் சுவாமி முன் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கிராமத்தினருக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன.

பின்னர், கிராமத்தின் சார்பாக வான வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் வந்து அய்யூர் பிரிவு அருகே உள்ள கம்மாய் தண்ணீரில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு போலீசார் செய்திருந்தனர்.

மதுரை அருகே சோழவந்தான் தச்சம்பத்து தேனு சமயநல்லூர் விளாங்குடி கருப்பாயூரணி திருமங்கலம் மேலூர் உள்ளிட்ட பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி மூலம் போலீஸ் பாதுகாப்பு அமைதியாக நடந்தது.

போலீசாரின் ஆலோசனைக்கு ஏற்ப ,இந்த ஆண்டு மேலும்   வெடிக்க தடை விதித்திருந்ததால், விநாயகபுரம் ஆர்ப்பாட்டமாக இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது.

Tags:    

Similar News