வாடிப்பட்டி பகுதி பள்ளிகளில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா
வாடிப்பட்டி அரசுபள்ளிகளைச்சார்ந்த மாணவ-மாணவிகள் 317 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது;
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ,விலை இல்லா நிதி வண்டிகளை, பேரூராட்சி த் தலைவர் பால்பாண்டியன் வழங்கினார்.
வாடிப்பட்டி அரசுபள்ளிகளைச்சார்ந்த மாணவ-மாணவிகள் 317 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடந்த நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியர் எட்வட் ராஜா தலைமை வகித்தார்.
ஒன்றியச்செயலாளர் பாலராஜேந்திரன், முன்னாள்பேரூராட்சித்தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிதலைமை ஆசிரியர் விஜயரெங்கன் வரவேற்றார். பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன் 116மாணவர்களுக்கு, மிதிவண்டிகள் வழங்கினார்.
இதில், வழக்கறிஞர் கோகுல்நாத், முரளி, உடல்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், ஸ்டாலின், விவசாய ஆசிரியர் சுரேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் நரேந்திரா நன்றி கூறினார். அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை வகித்தார். பெற்றோர்ஆசிரியர்கழகநிர்வாகிகள் சர்வோதயா சுந்தரராஜன், ரெங்கசாமி, ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிதலைமை ஆசிரியர் பிரேமா வரவேற்றார்.
பேரூராட்சித்தலைவர் பால்பாண்டியன், 143மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார். இதில், கணினிஆசிரியர் கார்த்திக் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர். முடிவில் ,உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் நன்றி கூறினார். பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசுமேல்நிலைப்பள்ளியில், நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் விஜயக்குமார் தலைமை வகித்தார். கவுன்சிலர் ஐ.கே.குருநாதன் முன்னிலை வகித்தார்.
உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார். பேரூராட்சித்தலைவர் பால்பாண்டியன் 58மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.இதில், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் உடற்கல்விஆசிரியர் பி.ஜி.ராஜா நன்றிகூறினார்.