மதுரை அருகே வைகை நதியின் கரையோரங்களை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்
கடந்த ஆட்சி காலத்தில் 38 மாவட்டங்களிலும் உள்ள தகவல்கள் நிமிடத்துக்கு நிமிடம் சேகரித்து மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது;
வைகை அணையில் தண்ணீர் திறப்பதையொட்டி ஆற்றின் கரையோரப்பகுதிகளை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து மேலக்கால் குருவித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள வைகை ஆற்றின் கரையோரப்பகுதிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது: தற்போது, வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. தற்போது, 69,29 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதனால், மூன்று கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனை த் தொடர்ந்து, சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஆற்று நீரோட்டத்தை அரசு ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, கரையோர பகுதி மக்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். குறிப்பாக ஆற்றில் மக்கள் இறங்கி துணி துவைக்கவும், குளிக்கவோ அல்லது கால்நடைகளை குளிப்பாட்ட கூடாது. ஏனென்றால், தண்ணீர் திறந்து இருப்பதால் நீரோட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்து வந்தாலும், மழை நீர் வடியவில்லை. அரசு உயர் அலுவலர்களை நியமித்தாலும், அவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமல், இருப்பதால் மீட்பு பணியில் மிகுந்த சுணக்கம் இருந்து வருகிறது. முதலமைச்சர் மீட்பு பணிகளில் வேகப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது, தற்போது புயல் இல்லை என்பது நமக்கு ஆறுதலாக இருந்தாலும், அடுத்த புயல் நவம்பர் 13ஆம் தேதி தெற்கு அந்தமானில் உருவாகி ,வடக்கு மாவட்டங்களில் நோக்கி வரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, அதையும் இரவு பகல் பார்க்காமல் கண்காணிக்கவேண்டும்
குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் அம்மா உணவகம் மூலம் உணவு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். அந்த அடிப்படையில் தற்போது, முதலமைச்சர் அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்கு அம்மா ஆட்சி காலத்தில் சமுதாய அடுப்பு உருவாக்கி அதன்மூலம் உணவு சமைத்து வழங்கப்பட்டது. அதையும் அரசு செய்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
அதேபோல், காவிரி டெல்டா பகுதிகளில் பல லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அதையும் உரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் குறிப்பாக ஏற்கனவே பாரத பிரதமர் பருவ மழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதனடிப்படையில, முதல் கட்டம் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்டம் என்று பிரித்து உரிய கணக்கெடுப்பை எடுத்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்
ஏனென்றால், முதல்கட்ட பாதிப்புகளை கணக்கிட்டு அனுப்பினால், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை நாம் பெறலாம். அதேபோல, புதிய இயந்திரங்கள் வாங்கப்பட்டது அதை பயன்படுத்தபடுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.அதேபோல், சென்னையில் வெள்ள நீர் கடலில் சேர நீரோட்டம் வசதி உள்ளது அதை அரசு முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
இந்த 20 சென்டிமீட்டர் மழையில் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு உள்ளார். ஆனால், மீட்பு பணி மிகவும் மந்தமாக இருக்கிறது. போர்க்கால நடவடிக்கை முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் அவசர கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டது. அதில், 38 மாவட்டங்களிலும் உள்ள தகவலை நிமிடத்துக்கு நிமிடம் தகவல் சேகரிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது மத்திய அரசு பருவமழை குறித்து எச்சரிக்கையை உடனே பெறப்பட்டு அதை மக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்பட்டது.
ஏற்கெனவே, முதலமைச்சராக இருந்த எடப்பாடி ஆய்வு செய்தார். தற்போது ,அவர் வழியை பின்பற்றி இன்றைக்கு முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆகவே அம்மா ஆட்சி காலத்தில் எடுத்த போர்க்கால நடவடிக்கையை அரசு பின்பற்றி செயல்படுத்த வேண்டும். வைகை அணையில் 67 அடி வரும்பொழுது அம்மா ஆட்சி காலத்தில் 58 கால்வாயில் மூன்று முறை திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. தற்போது, 69அடியாக உயர்ந்துள்ளது 58 கால்வாய் திட்டத்திற்கு நீரை திறந்துவிட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் கொரியர் கணேசன், செல்லம்பட்டி ராஜா, பேரூர் கழகச் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயகுமார் உட்பட பலர் இருந்தனர்.