அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்பு

அதிமுக நிர்வாகி இல்ல காதணி விழாவில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்றார்.

Update: 2024-06-23 09:07 GMT

சோழவந்தான் அருகே தென்கரை அதிமுக கிளை செயலாளர் இல்ல விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பங்கேற்றார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட தென்கரை கிளைக்கழகச் செயலாளர் எம். முருகன் - விஜயா தம்பதியர் இல்ல காதணி விழாவில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமா ஆர்.பி . உதயகுமார் கலந்து கொண்டு குழந்தைச் செல்வங்களை வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கொரியர் கணேசன், வாடிப்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ்,மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், ஒன்றிய துணைச் செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், கருப்பட்டி தங்கப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், அம்மா பேரவை இணைச் செயலாளர் துரை தன்ராஜ், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா , சோழவந்தான் முன்னாள் சேர்மன் எம் .கே. முருகேசன், மருத்துவர் அணி துணைச் செயலாளர் கருப்பட்டி டாக்டர் கருப்பையா, பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், டீக்கடை கணேசன்,பேரூர் துணைச் செயலாளர் தியாகு ,ஏழாவது வார்டு செயலாளர் எஸ். பி. மணி,பேரூர் இணைச் செயலாளர் பெருமாள், மன்னாடி மங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, தென்கரை ஜெயக்குமார், பேட்டை மாரி பாலா, சோழவந்தான் ஜெயபிரகாஷ், துரைக் கண்ணன், சிவா மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத் துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர் . இறுதியில் இளைஞரணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News