மதுரையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் உதயக்குமார் பிரசாரம்

வாடிப்பட்டி பேரூராட்சி 18-வது வார்டு வேட்பாளர் அசோக்குமாருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாக்கு சேகரித்தார்;

Update: 2022-02-13 09:30 GMT

வாடிப்பட்டி பேரூராட்சி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பிரசாரம் செய்தார்.

வாடிப்பட்டி பேரூராட்சி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பிரசாரம் செய்தார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி ,18-வது வார்டு வேட்பாளர் அசோக் குமாரை ஆதரித்து, மேட்டுநீரேத்தான் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ வாக்குகள் சேகரித்தார்.

இதில், உசிலம்பட்டி திருமங்கலம் முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன், கள்ளிகுடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, பேரூர் நிர்வாகிகள் ராஜேஷ்கண்ணா, விவசாய அணி செயலாளர் வாவிடமருதூர் குமார், நிர்வாகிகள் சந்தன துரை, கட்சைகட்டி ரவி, குமாரம் பாலன், தண்டலை ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பெண்கள் வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் சாலை, லாலா மிட்டாய் கடை , பேருந்து நிலையம், போடிநாயக்கன்பட்டி , செல்ல குளம், பெருமாள்பட்டி , சாணம் பட்டி பகுதிகள் ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

Tags:    

Similar News