மதுரை அருகே அதிமுக வேட்பாளரை மீட்டுத் தரக்கோரி முன்னாள் அமைச்சர் போராட்டம்

வாடிப்பட்டியில் 9-வது வார்டு அ.தி.மு.க வேட்பாளரை மீட்டுத்தரக் கோரி, ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அண்ணா சிலை முன்பு காத்திருக்கும் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.;

Update: 2022-02-07 09:39 GMT

வாடிப்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அண்ணா சிலை முன்பு காத்திருக்கும் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18 வார்டுகள் உள்ளது. இதில், தி.மு.க., அ.தி.மு.க.,உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. 9-வது வார்டில் தி.மு.க சார்பாக முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ண வேணியும், அதிமுக சார்பாக இந்திராணி இருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வேட்புமனு தாக்கலில் இன்று 7ந் தேதி திங்கள்கிழமை மதியம் 3 மணி வரை திரும்பப் பெற வேண்டும். இந்நிலையில், நேற்று முதல் அ.தி.மு.க வேட்பாளர் இந்திராணி மாயமானார் .

அவரை தி.மு.கவினர் கடத்தி சென்றதாகவும், அவரை மீட்டுத்தரக் கோரியும், அ.தி.மு.க மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் அண்ணா சிலை முன்பு காத்திருக்கும் போராட்டம் நடந்து வருகிறது.

இதில் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் ராஜா, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பேரூர் பொறுப்பாளர் சோனை, கூட்டுறவு சங்க துணைத் தலைவர் அசோக் குமார் மற்றும் பேரூராட்சி வேட்பாளர்கள் நிர்வாகிகள் துறை தன்ராஜ், அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் முருகன்,  வாடிப்பட்டி மணிமாறன், கோட்டைமேடு பாலா, வாவிடமருதூர் குமார், குமாரம் பாலன், சின்ன பாண்டிய மகளிரணி ஒன்றிய செயலாளர் குருவித்துறை வனிதா, விவசாய பிரிவு இணைச் செயலாளர் மன்னாடி மங்கலம் கந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் சோழவந்தான் நகர இளைஞரணி செயலாளர் கேபிள் மணி, வணங்காமுடி, மன்னாடி மங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, ஒன்றிய கவுன்சிலர் கருப்பட்டி தங்கபாண்டியன், நாச்சிகுளம் தங்கபாண்டி, தென்கரை இராமலிங்கம், பேரூராட்சி செயலாளர் பாஸ்கரன், அசோக் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News