விலங்குகளிடம் பரிவு காட்டும் அரசு போக்குவரத்துக் கழக முன்னாள் ஓட்டுநர்
பாலமேட்டிற்கு அருகேயுள்ள சாஸ்தியார் அணைபகுதியில் சுற்றிதிரியும் குரங்குகளுக்கு வாழைப்பழத்தை உணவாக கொடுத்து வருகிறார்;
மதுரை அருகே விலங்குகளிடம் பரிவு காட்டி உணவளித்து வரும் அரசு போக்குவரத்து கழக முன்னாள் ஓட்டுநர்.
விலங்குகளிடம் பரிவு காட்டி உணவளித்து வருகிறார் அரசு போக்குவரத்து கழக முன்னாள் ஓட்டுநர்.
மதுரை மாவட்டம், பாலமேடு சேர்ந்த கு.தங்கம். முன்னாள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், தற்போது பாலமேட்டிற்கு மேற்கே அமைந்துள்ள சாஸ்தியார் அணை பகுதியில் ,சுற்றிதிரியும் குரங்குகளுக்கு வாழைப்பழம் உணவாக கொடுத்து வருகிறார்.
இவரை பார்த்ததும், குரங்குகள் துள்ளி குதித்து ஓடிவந்து வாழைப்பழ உணவை பெற்று செல்கிறது. இவர், கடந்த கொரோனா காலத்தில் இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் இந்த சேவையை செய்துவருகிறார். இவரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ராமேஸ்வரம் முதல் மதுரை வரையிலான அரசு பஸ்சில் டிரைவாக பணிபுரிந்தபோது, வரும் வழியில் சூட்கேஸ் கீழே கிடந்ததை எடுத்து மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
அந்த சூட்கேசில் பல லட்சம் மதிப்பிலான தங்க நகை இருந்ததை உரியவரிடம் (சென்னை) தல்லாகுளம் காவல்நிலையத்தின் ஓப்படைத்தனர். இதனால் அரசு போக்குவரத்து கழக டிரைவர் தங்கத்தை பாராட்டினர் என்பது குறிப்பிடதக்கது. டிரைவர் தங்கம் 1995ம் வருடம் ரூ..20 லட்சம் மதிப்பிலான பொருள்களை ஒப்படைத்தற்காக கமிஷனர் அபாஷ்குமார் பாராட்டினார். .மேலும், போக்குவரத்து துறை நிர்வாக இயககுனர் சந்தீப்சச்சேனாவும் இவரை பாராட்டியுள்ளனர். இவருடைய மனித நேயத்தை கிராம மக்களும் பாராட்டி வருகின்றனர்.