மதுரை மாவட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் தை அமாவாசையை ஒட்டி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்;

Update: 2023-01-21 09:15 GMT

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் தைஅம்மாவாசையை ஒட்டி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்

மதுரை மாவட்டம்,.சோழவந்தான் அருகே திருவேடகத்தில் தை அமாவாசையை ஒட்டி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்

மதுரை மாவட்டம் ,சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றங்கரையில் தை அமாவாசை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அம்மாவாசை தினங்களில் பிரசித்தி பெற்றது தை அமாவாசை அதனை முன்னிட்டு திருவேடகம் ஏடகநாதர் ஏலவார் குழலி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்து. வைகையாற்றில் பூஜை பொருட்களைக் கொண்டு ஏராளமானோர் தர்ப்பணம் செய்து ஆற்றில் கரைத்தனர்.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நபர்கள் வரிசை வரிசையாக வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி முன்னோர் வழிபாடு மேற்கொண்டனர். இதேபோல சோழவந்தான் பிரளய நாதர் சிவாலயத்திலும், தென்கரை அருள்மிகு மூல நாத சுவாமி கோவில் ஆலயத்திலும் நெய் விளக்கு மோட்ச தீபமிட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து பசு மாட்டிற்கு அகத்திக் கீரையும் வழங்கி வழிபாடு மேற்கொண்டனர்.

இது போல, மதுரை அண்ணாநகர் மேலமடை சௌபாக்ய விநாயகர் ஆலயம், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், யானைக் குழாய் முத்து மாரியம்மன், சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயத்தில், தை அமாவாசையையொட்டி, தர்ப்பணம் நடைபெற்றது.

Tags:    

Similar News