அலங்காநல்லூரில் முருக பக்தர்கள் சார்பில் அன்னதானம்

பழனி ஆண்டவர் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பாக, அலங்காநல்லூரில் திருவிளக்கு பூஜை அன்னதானம் நடைபெற்றது.;

Update: 2023-12-31 09:25 GMT

அலங்காநல்லூரில் முருக பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பழனி ஆண்டவர் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பாக திருவிளக்கு பூஜை அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில், ஸ்ரீ பழனியாண்டவர் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இப்பகுதியில், விவசாயம் செழிக்க வேண்டியும், புயல் வெள்ள கன மழை பாதிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் உலக நன்மைக்காகவும் பழனி ஆண்டவர் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் .

கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கு பூஜை பொருட்களும், பிரசாதமும் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை, பழனியாண்டவர் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர். சிறப்பு அழைப்பாளராக அலங்காநல்லூர் தர்ம சாஸ்தா ஆலய நிர்வாகி சீனிவாசன் சுவாமிகள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்.

Similar News