அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சோழவந்தானில் உறுதிமொழி ஏற்பு
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், சோழவந்தானில் தேசியக்கொடி ஏற்றி, உறுதிமொழி ஏற்கப்பட்டது.;
மன்னாடிமங்கலத்தில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தேசிய தலைவர்களை பாதுகாப்போம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், தேசிய தலைவர்களை பாதுகாப்போம் உறுதிமொழி ஏற்பு மற்றும் தேசியக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு, இங்குள்ள மெயின் ரோட்டில் சுதந்திர போராட்ட தியாகிகள் வேலுநாச்சியார், மருது பாண்டியர்கள், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் ஆகியோரின் திருவுருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இவ்விழாவிற்கு, மாவட்டக்குழுவின் சுதாகர் தலைமை தாங்கினார். பாண்டி முன்னிலை வைத்தார். சிபிஐ ஒன்றியச் செயலாளர் தவமணி தேசியக்கொடியை ஏற்றி வைத்து தலைவர்கள் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தார். ஆனந்தன் வரவேற்றார். பரணிதரன் நன்றி கூறினார்.