சோழவந்தான் அருகே தீப்பிடித்து வீடு கட்டுமான பொருட்கள் சேதம்

வீடு கட்டுவதற்கான நிலை மற்றும் கதவுகள் மோட்டார், எலக்ட்ரிக்கல் பொருட்கள் வீடு கடை பத்திரங்கள் முழுமையாக எரிந்து போனது;

Update: 2021-10-26 09:30 GMT

மதுரை சோழவந்தான் அருகே தீப்பிடித்து வீடு கட்டுமான பொருட்கள் முழுமையாக சேதமடைந்தது.

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி( 54.) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக தேக்கு மரத்திலான நிலை மற்றும் கதவுகள் மோட்டர் உட்பட எலக்ட்ரிக் சம்பந்தமான பொருட்கள் மற்றும் வீட்டு கடை பத்திரங்கள் வைத்திருந்தார். நேற்றைய இரவு திடீரென்று மளமளவென்று தீப்பிடித்து தென்னை மரம் உயரத்திற்கு எரிந்தது உடனே அருகில் இருந்தவர்கள் வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் சதக்கத்துல்லாஹ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டுவதற்கான நிலை மற்றும் கதவுகள் மோட்டார் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் வீடு கடை பத்திரங்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகி விட்டது. இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் பழனி மற்றும் சோழவந்தான் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News