சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் திருஏடகநாதர் கோவிலில் திருவிழா

இங்கு, ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறுவது வழக்கம்.

Update: 2022-09-11 09:30 GMT

வைகை ஆற்றில் நடைபெற்ற  ஆற்றில் ஏடு எதிர் ஏறும் வைபவம்

திருவேடகத்தில்  நடைபெற்ற ஏடு எதிரேறிய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் இங்கு மிகவும் பழமை வாய்ந்த சிவபெருமான் ஆலயமான திருஏடகநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல், இந்த ஆண்டும் நேற்று இரவு கோவிலிலிருந்து சுவாமி ஊர்வலமாக வைகை ஆற்றங்கரைக்கு விநாயகரும், குதிரை வாகனத்தில் ஏடகநாதரும் கேடயத்தில் திருஞானசம்பந்தரும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வைகை ஆற்றங்கர அருகில் சர்வ அலங்காரத்தில் வைத்திருந்தனர். பின்னர், சிவனடியார்கள் சார்பாக வேத மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆற்றில் ஏடு எதிர் ஏறும் வைபவம் நடைபெற்றது. இதில், திருவேடகம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.இதில், கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News