சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

சோழவந்தான் அருகே தோட்டத்திற்கு சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Update: 2024-05-24 11:06 GMT

மின்சாரம் தாக்கி இறந்த முதியவர் ஆலடி.

சோழவந்தான் அருகே முள்ளிப் பள்ளத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆலடி (வயது 65.).இவர் இன்று காலைகடன் முடிப்பதற்காக முள்ளிப்பள்ளம் குருவித்துறை ரோட்டில் உள்ள தனியார் தோப்பில் சென்றுள்ளார்.எதிர்பாராத விதமாக அங்கு குறுக்கே சென்ற மின் வயர் தென்னை மரத்தில் உரசியதில் ஆலடிமீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து விட்டார்.

இது குறித்து முள்ளிப்பள்ளம்கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், கிராம உதவியாளர் ராமமூர்த்தி ஆகியோர் காடுபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சோழவந்தான் அருகே பல கிராமங்களில் தாழ்வாக மரங்களை ஒட்டி செல்லும் மின்சார வயர்களை, மின்சார வாரியம் சரி செய்ய வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

Tags:    

Similar News