வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட மோதலில் விவசாயி அடித்துக் கொலை

மதுரை அலங்காநல்லூரில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும்போது உருட்டுக்கட்டையால் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்;

Update: 2021-11-28 17:15 GMT

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சமயநல்லூரில் உள்ள வயலூர் பகுதியில் வசித்து வந்தவர் விவசாயி மருதுபாண்டி (55). இவரது வயல் அருகே சுரேஷ் (34) என்பவரது வயல்வெளியும் அருகே அமைந்துள்ளதாக கூறப்படுகிறது .

இந்நிலையில், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் இருவருக்கும் இடையே கடந்த நான்கு நாட்கள் முன் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், தகராறு முற்றியதால், சுரேஷ் உருட்டு கட்டையால், மருதுபாண்டியனை  தாக்கியுள்ளார்.  பலத்த காயமடைந்த மருதுபாண்டியன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி மருதுபாண்டியன் உயிரிழந்தார். உயிரிழந்த சம்பவத்தை அறிந்த சுரேஷ் தலைமறைவானார்.  இச்சம்பவம் குறித்து சமயநல்லூர் போலீஸார் சுரேஷ் மீது கொலை வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News