வாடிப்பட்டி அருகே, அரசுப் பள்ளியில் ,போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்!

வாடிப்பட்டி அருகே, அரசுப் பள்ளியில் ,போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.;

Update: 2024-06-29 15:44 GMT

வாடிப்பட்டி அதிக அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்.

விழிப்புணர்வு கருத்தரங்கு

வாடிப்பட்டி, ஜூன்.27-

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

இந்த கருத்தரங்கிற்கு, தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை தாங்கினார். முதுகலை தமிழாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். இக்கூட்டத்தில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார், ஏட்டு குணசேகரன் ஆகியோர் மாணவ- மாணவிக ளுக்கு போதை பொருட்கள் பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவுகள் பற்றி விளக்கிப் பேசினார். மாணவ- மாணவிக ளுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர் வு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில், உடற்கல்வி ஆசிரியர் ராஜன் நன்றி கூறினார்.


Tags:    

Similar News