நெல் கொள்முதல் நிலையங்களில் திமுகவினர் தலையீடு: பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு
தேங்கியுள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசுஉடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்;
நெல் கொள்முதல் நிலையங்களில் திமுகவினரின் தலையீடு இருப்பதாக பாஜக மாநில நிர்வாகி குற்றச்சாட்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்களை கொள்முதல் செய்ய தமிழக அரசுஉடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார் பாஜக மாநில விவசாய பிரிவு தலைவர் ஜி கே நாகராஜ் .
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பாஜக மாநில நிர்வாகி நாகராஜன் கள ஆய்வு செய்தார்.பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவசாய பிரிவு மாநில தலைவர் ஜி.கே. நாகராஜன் கூறும்போது : தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவு நெல் மூட்டை தேங்கியுள்ளது. வாடிப்பட்டி தாலுகாவில், அமைக்கப்பட்ட வடுகபட்டி தனிச்சியம் நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு நெல் தேங்கியுள்ளது.
முதல்வரின் பேச்சுக்கும் கள நிலவரத்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் திமுகவினர் தலையீடு அதிகம் உள்ளது. இதனால், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இது சம்பந்தமாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மாநில தலைவரின் ஆலோசனையை ஏற்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். விவசாயிகள் பிரச்னை தொடர்பாக, மாநில ஆளுநரை சந்தித்து விரைவில் மனு அளிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார் அவர். உடன் விவசாய பிரிவு மாநில துணைத்தலைவர் தொழிலதிபர் சோழவந்தான் மணி என்றமுத்தையா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.