சோழவந்தானில் தி.மு.க. சார்பில் இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழா
சோழவந்தானில் தி.மு.க. சார்பில் இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழா இன்று நடைபெற்றது.;
சோழவந்தானில் இம்மானுவேல் சேகரன் உருவ படத்திற்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
சோழவந்தானில் தி.மு.க. சார்பில் இமானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு வெங்கடேசன் எம். எல். ஏ. மலர் தூவி மரியாதை செய்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி தி.மு.க. சார்பில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் நகர செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச்சந்திரன், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, நிஷா கௌதம ராஜா ,முத்து செல்வி சதீஷ், ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா சரவணன், முள்ளிபள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, ரிஷபம் ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி, திருவாலவாயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர் சாதிக் திருவேடகம் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி சுரேஷ், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாதுரை, அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், சங்கங்கோட்டை ரவி, சந்திரன், ஒன்றிய இளைஞரணி பால் கண்ணன், மாவட்ட மகளிர் அணி சந்தான லட்சுமி, நகர மகளிர் அணி தீர்த்தம்சத்யா, பேரூர் இளைஞர் அணி முட்டை கடை காளி தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பி ஆர் சி பாலசுப்பிரமணியம் மேலக் கால் ராஜா, மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இறுதியாக பேரூர் நிர்வாகி தவப்பாண்டி நன்றி கூறினார்.