மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் திமுக பொதுக் கூட்டம்
DMK general meeting in Alankanallur;
திமுக சார்பில் அலங்காநல்லூரில் முன்னாள் முதல்வர் கருணந்தி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது..
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பாக, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, பேரூர் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்..
தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஒன்றியச் செயலாளர்கள் கென்னடி கண்ணன், அவைத்தலைவர் பாலமேடு பாலசுப்ரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் விஜயலட்சுமி முத்தையன், ஒன்றிய செயலாளர் பரந்தாமன், விவசாய அணி அமைப்பாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் சேர்மன் ரகுபதி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர் .இதில், வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளரும் சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, தலைமை கழக பேச்சாளர் காமராஜ் விளக்கிப் பேசினார் .
இந்த விழாவில், ஒன்றியக்குழுத்தலைவர் மதுரஅழகு, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் பாண்டியம்மாள், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், பேரூராட்சி துணை சேர்மன் சாமிநாதன், கவுன்சிலர் கோவிந்தராஜ் இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சதீஷ்குமார், மாணவரணி அமைப்பாளர் யோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பேரூர் பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.