வாடிப்பட்டி மரசெக்கு பிரிவில் வேளாண் இயக்குநர் ஆய்வு

ஒவ்வொரு மாவட்டத்தினைச்சார்ந்த உறுப்பினர்களின் கோரிக்கைகளை கேட்டு அதற்கான தீர்வுகளை உடனுக்குடன் பரிசிலனை செய்து நிறைவேறும்

Update: 2021-11-27 09:45 GMT

வாடிப்பட்டியில் மர செக்கு எண்ணெய்  தயாரிக்கும் பிரிவை  வேளாண் இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்

மதுரை அருகே டி.வாடிப்பட்டி வட்டாரத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமையப்பெற்றுள்ள மரச்செக்கு எண்ணெய் யுனிட், சிறுதானிய மாவு மற்றும் மசாலா அரைக்கம் இயந்திரத்தினை, வேளாண் விற்பனை மற்றும் வணிக, இயக்குநர் முணைவர் ச.நடராஜன், பார்வையிட்டு உறுப்பினர்களுடன் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.

வாடிப்பட்டியில், உள்ள ஒழுங்குமுறை விறபனை சகூடத்தினை பார்வையிட்டார். மதுரை, புதூர் சிட்கோவில் முருங்கை ஏற்றுமதி மண்டலத்திற்காக கட்டப்பட்டுகவரும் கட்டுமானங்களை் பார்வையிட்டார். பின்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டத்தினைச் சார்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவணங்களைச் சார்ந்த உறுப்பினர்கள், முதன்மை செயல் அலுவலர்கள், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்களுடன் இயக்குநர் வேளாண் விற்பனை மற்றும் வணிக, இயக்குநர் முணைவர் ச.நடராஜன், மற்றும் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர்  எஸ்.அனீஸ் சேகர்  ஆகியோர் கலந்துரையாடினார்கள். ஒவ்வொரு மாவட்டத்தினைச்சார்ந்த உறுப்பினர்களின் கோரிக்கைகளை கேட்டு அதற்கான தீர்வுகளை உடனுக்குடன் பரிசிலனை செய்து நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில்,  வேளாண் துணை இயக்குநர் பி.விஜயலட்சுமி, மதுரை வேளாண் வணிகம் மற்றும் விற்பனைக் குழு செயலாளர்  மெர்சிகைராணி , வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News