அலங்காநல்லூர் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்
முத்தாலம்மன் மற்றும் காளியம்மன் உற்சவத்தையொட்டி, பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்;
அலங்காநல்லூர் அருகே பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சர்க்கரை ஆலை 15 பி. மேட்டுப்பட்டியில், வைகாசி மாத பொங்கல் திருவிழாவில் முத்தாலம்மன் மற்றும் காளியம்மன் உற்சவத்தையொட்டி, பெண்கள் முளைப்பாரியினை, ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். முன்னதாக, காளியம்மன், முத்தாலம்மனுக்கு பக்தர்கள் சார்பில், சிறப்பு அபிஷேகமும், அர்ச்சணை வழிபாடுகள் நடைபெற்றது.