மதுரை அருகே சுவாமி வேடமணிந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும் பக்தர்கள்
மதுரை வைகை ஆற்றில் மே. 5 -ஆம் தேதி தங்க குதிரைவாகனத்தில் கள்ளழகர் என்ற சுந்தர் ராஜ பெருமாள் இறங்குகிறார்;
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டாக சுற்று வட்டார கிராம மக்கள்கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்பாக இப்பகுதியில் உள்ளபக்தர்கள் தாங்கள் வேண்டுதலின்படி, அனுமார் வேஷம் தீப்பந்தம் அருவா கம்பு ஆகியவையுடன் வேடமடைந்து கிராம பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு ஆசி வழங்கி வருவது வழக்கம்.
அதேபோன்று, இந்த ஆண்டு நடைபெறும் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு,வலசை கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் வேடமணிந்து மேலதாளங்கள் முழங்க, ஊர்வலமாக சென்று ஆசி வழங்கி வருகின்றனர்.இதில், அலங்காநல்லூர் பேரூராட்சி துணைத் சேர்மன் சாமிநாதன் வேடமணிந்து,வீதி வீதியாக சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் மீனாட்சியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் மே 2ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மன் சித்திரை வீதியில் வலம் வரும் நிகழ்வு நடைபெறுகிறது. மே 3ஆம் தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னர், சித்திரை பெருவிழாவின் நிறைவு நாளில் வெள்ளி ரிஷப வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளுகின்றனர். மே5ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது