இரும்பாடி, மாயாண்டி சாமி ஆலய விழா: பக்தர்கள் கூட்டம்!
சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணபுரம் மாயாண்டி சாமி கோவில் வைகாசி உற்சவ விழா நடைபெற்றது.
சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணபுரம் மாயாண்டி சாமி கோவில் வைகாசி உற்சவ விழா:
சோழவந்தான்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில், அமைந்துள்ள ஸ்ரீ மாயாண்டி சாமி ஸ்ரீ முனியாண்டி சாமி ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் ஸ்ரீ சோனைசாமி இவைகளின் வைகாசி உற்சவ விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. கடந்த 28ஆம் தேதி காலை இரும்பாடி வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.
இரவு, இரும்பாடி ஊராட்சி மந்தையில் நையாண்டி மேளம் கரகாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 29ஆம் தேதி காலை முளைப்பாரி ஊர் வளமும் 10 மணிக்கு மேல் கோவில் முன்பு பொங்கல் வைத்து அபிஷேகம் நடைபெற்றது. மாலை, வைகை ஆற்றுக்கு சென்று அக்னி சட்டி பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று காலை பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் எடுத்துச்சென்று வைகை ஆற்றில் கரைத்தனர். இதில், பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டு மாயாண்டி சாமியை தரிசித்து சென்றனர். ஏற்பாடுகளை, பாலகிருஷ்ணாபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இரும்பாடி ஊராட்சி சார்பில், சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.